• +94 70 444 1234
  • info@raziinternationaltrading.com

எம்மைப்பற்றி

RAZI INTERNATIONAL TRADING (PVT) LTD

RIT பங்குடமைக் கம்பனியின் உரிமையாளர் Dr. MIM. Razi அவர்கள் 2001 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை, இரத்தினக்கல் பட்டை தீட்டுபவராக உயர் வருமானத் தொழில் புரிந்து கொண்டு, அக்காலப் பகுதியிலேயே அவர் Gemology, மற்றும் அவருடைய Western and Eastern Medicine மருத்துவக் கல்வியையும் கற்று வந்தார். 2009 ஆம் ஆண்டு Gemologist ஆக பட்டம் பெற்றதன் பிறகு, அவர் இரத்தினக்கல் வியாபாரத்தினை சுயமாகத் தொடங்கினார். மேலும் குறுகிய காலத்திலேயே இரத்தினக் கற்கள் அகழ்வினை மேற்கொள்பவராகவும், அத்தோடு வைரம் மற்றும் ஓபல் கற்களை கொள்வனவு செய்து, அவைகளையும் பட்டை தீட்டி விற்பனை செய்பவராகவும் முன்னேற்றமடைந்தார்.

பின்பு 2017 ஆம் ஆண்டு வரை, தனியார் கல்விக் கல்லூரி, சீன இந்திய மூலிகை விற்பனை, தேயிலை ஏற்றுமதி மற்றும் விற்பனை, தங்கம், வெள்ளி, ஜவுளி, வாசனைப் பொருட்கள், மடிக்கணனிகள், கையடக்கத் தொலைபேசிகள், மின்சார உபகரணங்கள், மீன்பிடி, கடற்சங்குகள், பன்னை வளர்ப்பு என்பவைகளைக் கொண்டு, திறமையுள்ள ஏனைய வியாபாரிகளுடன் இணைந்து தனது பங்குடமை வியாபாரத்தினை பன்முகப்படுத்தினார்.

இவ்வாறு தன்னுடைய விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் தன்னுடைய வியாபாரத்தில் வளர்ச்சியடைந்த அவர், 2018 ஆம் ஆண்டு Razi International Trading (Pvt) Ltd எனும் பங்குடமைக் கம்பனியை நிறுவினார். இக்கம்பனியில் ஆரம்ப இரத்தினக்கல் வியாபாரம் மற்றும் ஏனைய விற்பனைகள் என்பவற்றை இணைத்ததோடு, அதே ஆண்டிலேயே வாகன விற்பனை, வாகன வாடகை, நில மனை சொத்து வியாபாரம், கட்டிட வேலைத்திட்டம், மற்றும் தனியார் கட்டுமானம் எனும் செயற்றிட்டங்களையும் கொண்டு விருத்தி அடைந்ததார்.

இதற்கிடையில் 2012 ஆம் ஆண்டு, ஒரு மருத்துவராக தன்னுடைய மருத்துவப் பணியை மிக ஆர்வமாக ஆரம்பித்த டாக்டர் ராசி அவர்கள், 2017 ஆம் ஆண்டு மருத்துவத்துவத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றதன் பிறகு, அவருடைய கால நேரங்கள் அனைத்தையும் மருத்துவப் பணிக்காகவே அர்ப்பணம் செய்தார். மேலும் மருத்துவத்துறை வருமானங்கள் அனைத்தையும் தனது கம்பனியின் அவிவிருத்திக்காகவே செலவு செய்து வருகின்றார்.

RIT நிறுவனம் ஒரு வியாபாரக் கம்பனி என்ற வகையில், அதன் வருடாந்த Turnover இல் கவனம் செலுத்துகின்றது. அத்தோடு இக்கம்பனி ஏராளமான பொதுப்பணிகளையும், சமூக சேவைகளையும் செய்து வருகின்றது. மேலும் 2020 ஆம் ஆண்டிலிருந்து இக்கம்பனி புத்தக வெளியீடுகளையும் மேற்கொள்ளவிருக்கின்றது.

Updated:- RIT Secretary MS. Ismail Jawah

இன்றைய இளைய சமுதாயத்துக்கு தலை சிறந்த முன்னோடி

Razi International Trading (Pvt) Ltd கம்பனி முதல்வர், மரியாதைக்குரிய திரு டாக்டர் ராசி அவர்கள் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் யாருடைய உதவியுமின்றி, எந்தவிதமான பின்னணிப் பலமுமின்றி, தன்னுடைய சுய திறமையாளும், விடாமுயற்சியாளுமே இவ்வளவு விசாலமான ஒரு கம்பனியை அவர் நிறுவினார். சிறுவயதிலிருந்தே அவருடை வாழ்க்கை ஒரு போர்க்களமாகவே இருந்தது. அவருடைய குடும்ப உறவினர்களிலிருந்தும், சொந்தக்காரர்களிலிருந்தும் அவருக்குப் பக்கபலமாக எவருமே இருக்கவில்லை. மாறாக அவரது எதிரிகளும் போட்டியாளர்களும் பொறாமைக்காரர்களும், அவருடைய முன்னேற்றத்திற்கு எதிராக ஏராளமான கெடுதிகளையும் சதிகளையும் செய்து வந்தனர்.

டாக்டர் ராசி அவர்களுடைய உறவினர்களில் சிலர், அரசியல்வாதிகளாகவும் செல்வந்தர்களாகவும் இருந்தனர். அதேபோல் அவருடைய நண்பர்களில் பலர் பொருளார வளம் பொருந்தியவர்களாகவும் இருந்தனர். ஆனால் டாக்டர் ராசி மிகுந்த தன்மான உணர்வுள்ளவர். அதேபோல் பிடிவாதமும் ரோசமும் உள்ளவர். அவர் பிறருடைய உதவியில் வாழ்வதையோ அல்லது பிறரது உதவியில் முன்னேறுவதையோ அவர் ஒருபோதும் விரும்பவில்லை. அதை அவர் அடியோடு வெறுத்தார். இந்நிலையில் அவருடைய அதீத ஆற்றல்களையும் நேர்மையையும் கண்டு, நல்லுள்ளம் படைத்த பல பிரமுகர்களும் அரசியல்வாதிகளும் அவரோடு கைகோர்த்தனர். அவர்கள் வழங்கிய ஆதரவு டாக்டர் ராசி அவர்களுடைய பலமாகவும், செல்வாக்காகவும் மாறியது.

தனது தந்தையுடைய பணத்திலிருந்து ஒரு ரூபாவைக் கூட, தன்னுடைய வாழ்க்கைக்காகப் பெற்றுக்கொள்ள விரும்பாத டாக்டர் ராசி அவர்கள், அவருடைய முன்னேற்றத்தை தானே தீர்மானித்தார். அவருடைய சுய உழைப்பிலேயே அவர் முன்னேறினார். அதேபோல் அவருடைய சொந்த பணத்தைச் செலவு செய்தே அவர் மா பெரும் மருத்துவக் கல்வியைக் கற்றார். இவ்வாறு மிகுந்த தன்மான உணர்வுள்ள டாக்டர் ராசி அவர்கள், சிறுவயதிலிருந்தே படைப்பாற்றல் மிக்கவர், மேலும் சுய ஆளுமையுள்ளவர். அதேபோல் அவர் இயல்பிலேயே அன்பும் கருணையும் நிறைந்தவர், குறிப்பாக ஏழைகளை விரும்பி நேசிக்கக் கூடியவர்.

பொதுவாக ஒரு மனிதன் வாழ்க்கையில் உயர்ந்த நிலையினை அடைகின்ற பொழுது, இயல்பாகவே அவனை ஆணவமும் தற்பெருமையும் ஆட்கொண்டு விடுகின்றன. ஆனால் டாக்டர் ராசி அவர்கள் அவருடைய அந்தஸ்த்தையும் புகழையும் பிறரிடம் பகிர்ந்து கொள்வதைக் கூட விரும்ப மாட்டார். அவர் எப்போதும் எளிமையாகவே இருப்பார். அவரோடு நெருங்கிப் பழகுபவர்களைத் தவிர வேறு எவராலும் அவருடைய அந்தஸ்த்தையும் ஆற்றல்களையும் புரிந்து கொள்ளவே முடியாது. அவருடைய பணிவும் பண்பாடும் மிகவும் வியப்புக்குரியது.

இவ்வாறு நேர்மையும், எளிமையும், தன்மான உணர்வுமுள்ள, டாக்டர் ராசி அவர்களுடைய வாழ்க்கையும் விடாமுயற்சியும், நேர்மையாக முன்னேர நினைக்கின்ற இளைஞர் சமுதாயத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். மேலும் நேரத்தை வீணடிப்பவர்கள், முயற்சியற்றவர்கள், உழைப்பற்ற மூடர்கள், சுய விளக்கமற்றவர்கள், புரிந்துணர்வற்றவர்கள், நம்பிக்கையற்றவர்கள், உணர்ச்சிவசப்படுபவர்கள், அவசரப்புத்தி உடையவர்கள், பண்பாடற்றவர்கள், விமர்சிப்பவர்கள், பொறாமை உணர்வுள்ளவர்கள், போன்றவர்களோடு டாக்டர் ராசி நட்புறவு பேணுவதில்லை. இவ்வாறானவர்களை விட்டு விலகியதே என் முன்னேற்றத்தின் முதல்படியாக இருந்தது என்று அவர் கூறுகின்றார். அவருடைய இந்த சாமர்த்தியமும் ஒழுக்கமும் நாகரீகமும், வாழ்க்கையில் சாதிக்க நினைப்பவர்களுக்கு ஆதாரமுள்ள ஒரு முன்மாதிரியாகும்.

Updated:- RIT Secretary MS. Ismail Jawah

 

அனைவருக்கும் முன்மாதிரியான ஒரு தகவல்

டாக்டர் ராசி அவர்கள் வியாபாரத்தில் மாத்திரமல்லாமல், கல்வித்துறையில் விஞ்ஞானம், மருத்துவம் என்பவற்றிலும், மேலும் சட்டம், அரசியல், பொருளியல், சங்கீதம், கவிதை, எழுத்து, பேச்சு, தற்காப்புக்கலை, என ஏராளமான கலைத்துறைகளிலும் அவர் வல்லமை பொதிந்தவர். இவை அனைத்திலும் ஒரேநேரத்தில் தேர்ச்சி பெறுவது, ஒரு தனிமனிதனால் எவ்வாறு சாத்தியமானது, என்பது எம்மனைவருக்கும் முன்மாதிரியான ஒரு விடயமாகும்.

டாக்டர் ராசியின் சுவாரஸ்யமான பதில் :-

ஒருநாள் டாக்டர் ராசி அவர்களிடம், நீங்கள் எவ்வாறு இத்தனை திறமைகளையும் மொத்தமாக அடைந்துகொண்டீர்கள் என்றும், மேலும் ஒரே நேரத்தில் எல்லா துறைகளிலும் எவ்வாறு சாதித்தீர்கள், அது உங்களால் எப்படி முடிந்தது, என்றும் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் இரண்டு பதில்கள் சொன்னார்.

முதலாவதாக அவர் சொன்னார் – கால நேரமே எனது வெற்றியின் இரகசியம். அதாவது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனும், சுமார் பத்து மணி நேரத்தை வீணாக கழிக்கின்றான். அதை அவன் மற்றவர்களுடைய குறைகளைத் தேடுவதிலும், அடுத்தவர் மீது பொறாமை கொள்வதிலும் செலவு செய்கின்றான். ஆனால் நான் என்னுடைய முழு நேரத்தையும் எனது முன்னேற்றத்திற்காக பயன்படுத்தினேன் என்று கூறினார்.

இரண்டாவதாகச் சொன்னார் – என் வாழ்க்கையில் நான் யாருக்குமே கெடுதி நினைத்ததில்லை.   ஏனெனில்,

நாம் அடுத்தவர்களுக்கு ஒரு கெடுதி செய்தால், அதில் நாமும் சேர்ந்தே சிக்கிக் கொள்கின்றோம்.     மாறாக,

நாம் மற்றவர்களுக்கு நலவு செய்தால், அதில் நாமும் சேர்ந்து தான் பலன் அடைகின்றோம். என்று அவர் கூறினார். அவை சாதாரண பதிலாக எனக்கு தென்படவில்லை. அதில் ஏராளமான உள்ளர்த்தங்கள் அடங்கி இருந்தன.

அவருடைய அந்த பதில்கள் இரண்டும், இன்றைய இளைய சமுதாயத்தினருக்கும், மாணவர்களுக்கும் மாத்திரமல்லாமல், எல்லா மனிதர்களுக்கும் இது ஒரு சிரேஷ்டமான தகவல் என நான் நம்புகின்றேன்.

Updated:- ARM. Jifry (Professor, Senior Journalist SLBC)